வீட்டுக்குள் புகுந்து வெடித்து சிதறிய விமானம்! பயணிகளின் கதி என்ன?

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வீட்டுக்குள் புகுந்து வெடித்து சிதறியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூயோர்க்கில் உள்ள ஒரு கிராம பகுதியில் உள்ள வீட்டுக்குள் Cessna 303 ரக விமானம் ஒன்று உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு புகுந்து வெடித்தது.

குறித்த விமானத்தில் மூன்று பேர் இருந்த நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவர் படுகாயமடைந்தனர்.

விமானம் புகுந்த வீட்டுக்குள் மூன்று பேர் இருந்தனர், இந்த விபத்தின் காரணமாக அதில் ஒருவர் உயிரிழக்க, இன்னொருவர் காயமடைந்தார். மூன்றாவது நபரின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை.

விமானம் வெடித்ததால் அந்த இடத்திலிருந்து நெருப்பு புகை அதிகளவு வெளியேறியது.

விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில் விமானத்தின் இன்ஜீனில் கோளாறு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.