10வருட காதல்- தற்போது அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது?

நாடுகளை கடந்து ஒன்றிணைந்த ஓரினச்சேர்கை பெண்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி

மேகலா இவர் இந்தியாவின் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். டெய் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்தவர். வெர்ஜினியாவில் இருவரும் இணைந்து கற்கும் வேளையில் நட்பு ஏற்பட்டுள்ளது.

படிப்பு முடிந்ததும் இருவரும் பிரிந்தனர். மேகலா கனடா குடியுரிமை பெற்றிருந்தார் எனவே நாடு திரும்பிவிட்டார். அங்கு போன பின்புதான் அவரை பிரிவு பெரும் துயராக வாட்டியிருக்கிறது. அவர் தனது ஏக்கங்களை வெளிப்படையாக, டெய்ட்டிடம் தெரிவிக்க அவரும் அதே நிலையில் உள்ளதை வெளிபடுத்தி இருக்கிறார்.

அவர்கள் இணைந்திருந்ததை இரு குடும்பத்தாரும் தெரிந்துகொண்டதும் கொதித்தெழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நான்கு வருடங்கள் அவர்கள் சோகத்தையும், துயரத்தையும், தனிமையையும் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் இருவரும் எப்போதாவது ஒருமுறைதான் சந்தித் திருக்கிறார்கள். அப்படி சந்திக்கும் நாட்களில் ஏதாவது ஒரு பஸ்சில் ஏறி, அருகருகே அமர்ந்து இரவுபகல் பாராமல் பயணம் செய்திருக்கிறார்கள்.

எதிர்ப்புகள் அவர்கள் காதலை வலுவாக்கியிருக்கிறது. எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல தீர்மானித்திருக்கிறார்கள். அப்போதுதான் தனது மனதிற்குள் எழுந்த மிக முக்கியமான கேள்வியை மேகலாவிடம், டெய்ட்டத் கேட்டிருக்கிறார். ‘எத்தனை பேர் எதிர்த்தாலும் நாம் ஒன்றிணைந்து வாழலாமா என்று. என்னுடைய துணையாக வாழ்க்கை வாழ தயாரா என்று.

டெய்ட்டத் திருமண ஆசையை வெளிப்படுத்திய அந்த காலகட்டத்தில் மேகலா, புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவரது ஆரோக்கியமும் சீர்குலைந்திருந்தது. மனதும், உடலும் தளர்ந்துபோயிருந்த ஆனாலும், மேகலாவுடன் உணர்வுரீதியாக டெய்ட்டத் ஒன்றுபட்டார்.

சொன்னபடியே டெய்ட்டத் மேகலாவை அருகில் இருந்து கவனித்தார். அன்பு செலுத்தினார். படிப்படியாக அந்த நோயின் கொடுமையில் இருந்து மருந்துகளின் உதவியோடு வெளிக்கொண்டு வந்தார். அவர் செலுத்திய பாசம் மேகலாவின் பெற்றோரை நெகிழவைத்தது. பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள ஒப்புகொண்டுள்ளனர்.

அதற்குள் அவர்கள் காதல் தோன்றி பத்து வருடங்கள் கடந்துபோயிருந்தன. அந்த பத்தாவது ஆண்டு காதல் தினத்தில், முதலில் அவர்கள் காதலை எங்கு வெளிப்படுத்தினார்களோ அந்த இடத்தில், அவர்களது ஆசிரியர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள்.