பொதுவாக அதிக எண்ணெய் சாப்பிடுவதாலும், உடல் சூடு காரணமாக பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி முகப்பரு வருவதுண்டு.
குறிப்பாக முகப்பரு ஹர்மோன்கள் மாற்றத்தாலும் தோன்றுகின்றது.
உண்மையில் தலையில் பொடுகுப் பிரச்சனை இருப்பவர்களுக்கு முகத்தில் பரு வருகிறது என்று சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் இந்த பொடுகுப் பிரச்சினையிலிருந்து விடுபட கொத்தமல்லி பெரிதும் உதவி புரிகின்றது.
தற்போது முகப்பருவை கொத்தமல்லியை கொண்டு எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.
- கொத்தமல்லி சாற்றுடன் 2 தேக்கரண்டி பால் இதேயளவு வெள்ளரி சாறு 4 தேக்கரண்டி ஓட்ஸ் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் பூசி சுமார் 15 நிமிடங்கள் அளவில் வைத்து முகத்தினை குளிர்ந்த நீரால் கழுவினால் மென்மையான சருமத்தினை பெறலாம்.
- ஒரு200 மில்லிலீற்றர் நீரில் கொத்தமல்லி, செவ்வந்தி இதழ் அல்லது எண்ணெய் மற்றும் சிறிது லெமன்கிராஸ் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி தண்ணீரை குளிர வைத்தல் வேண்டும். பின் அவிந்துள்ள பொருட்களை அரைத்து அதை முக்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், முகப்பருவினை விரைவில் போக்கலாம்.
- மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் வந்தால் அதனை போக்குவதற்று 1 தேக்கரண்டி கொத்தமல்லி சாற்றுடன் தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து, கரும்புள்ளிகள் உள்ள பகுதியில் பூசி அரை மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவ, கரும்புள்ளிகள் நீங்கும்.
- 2 தேக்கரண்டி கொத்தமல்லி சாறு, 2 தேக்கரண்டி தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ்வோட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள் முகத்தில் வரும் சிவத்த பருக்கள் இருந்த இடமே தெரியாது போகும்.
- கொத்தமல்லியில் உள்ள விட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள், முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே கொத்தமல்லி சாற்றினை எடுத்து, தலையில் நன்கு படும்படி பூசி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் தலையை வெதுவெதுப்பான நீரில் அலசினால் முடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
- உதடு கருப்பாக இருபவர்கள் இரவில் படுக்கும் முன், கொத்தமல்லி இலை சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். நாளடைவில் சிறந்த மாற்றம் தெரியும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாற்றையும் கலந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- சிறிது கொத்தமல்லி இலைகள், தயிர் மற்றும் கற்றாழை சாறு ஆகியவற்றை சரிசமமாக எடுத்துக் கொண்டு நன்றாக அரைத்து, அதில் 1 தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும். இது நல்ல ஸ்க்கரப் ஆகவும் தொழிற்படும