அதிர்ச்சியில் காங்கிரஸ்!! காரணம்??

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மத்திய, மாநில அரசி விமர்சித்து பேசினார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி பூமிக்கு பாரமாக உள்ளார் என்று ப. சிதம்பரம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசிய கருத்துக்கு ப. சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுதந்திர தின விழாவில் உரையில் மோடி பேசிய பல கருத்துகளில் மூன்று கருத்துகளை தான் ஆதரிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ப. சிதம்பரம் பதிவு செய்துள்ளார். அந்த மூன்று கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார். சிறிய குடும்பம் என்பது தேசத்திற்கான கடமை, செல்வத்தை உருவாக்குபவர்களை மதித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தல்’ என்பதாகும். பிரதமர் மடியின் கருத்து ப. சிதம்பரம் ஆதரவு தெரிவித்து இருப்பது காங்கிரஸ் மத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.