சிரியாவில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து தூக்கி வீசப்பட்ட கரு உட்பட 14 பேர் பலியாகியுள்ளனர்.
வடக்கு சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஹாஸ் நகரில் வெள்ளிக்கிழமையன்று ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
3 மில்லியன் பொதுமக்கள் வசிக்கும் இப்பகுதிகளில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் இருப்பதாக ரஷ்ய கூட்டுப்படைகளுடன் சேர்ந்து சிரிய இராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் கர்ப்பிணியின் வயிற்றிலிருந்து பிறக்காத கரு ஒன்று, குண்டு வெடித்த அதிர்ச்சியில் கருப்பையிலிருந்து தூக்கி வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்ணும் அவரது ஆறு குழந்தைகளும் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய ஆய்வகம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் அனைவருமே 18 வயதிற்குட்பட்டவர்கள். அந்த சமயத்தில் குழந்தைகளின் தந்தை வெளியில் சென்றிருந்ததால் அவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.