நடிகை ரேகா தான் இறந்த பின்னர் அடக்கம் செய்வதற்கான கல்லறையை அதற்குள் தயார் செய்துவிட்டதாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 1986ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கடலோர கவிதைகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேகா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெற்றி படங்களை கொடுத்து பல ரசிகர்களையும் பெற்றிருந்தார்.
தற்போது சிறிய வேடங்களில் மட்டுமே படத்தில் வந்து செல்லும் நடிகை ரேகா ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் சினிமாவின் நடிப்பது என் தந்தைக்கு பிடிக்காது. அதனால் நான் நடித்த ஒரு படத்தை மட்டுமே அவர் பார்த்துள்ளார். இருந்தாலும் அவருக்கு என் மீது அதிக அன்பும், அக்கறையும் உள்ளது.
என் அப்பா இறந்த பின்னர் கீழ்ப்பாக்கத்தில் அவருக்கு ஒரு கல்லறை எழுப்பினேன். அந்த கல்லறைக்கு அருகில் வேறு யாரையும் அடக்கம் செய்ய வேண்டாம் என கேட்டிருக்கிறேன்.
நான் இறந்த பிறகு அந்த இடத்தில் தான் அடக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.