பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என முதல் சீசனில் ஓவியா பல விஷயங்கள் செய்தார் குறிப்பாக குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, இதற்கு பின்னர் ஓவியா பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேறினார்.
இது போலவே 3வது சீசனில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற மதுமிதா கையை அறுத்து தற்கொலை முயற்சி செய்தார், இது பரபரப்பாக பேசப்பட்டது.
நான் ஏன் அப்படி செய்தேன் என முதன்முறையாக மதுமிதா பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, நான் தைரியமான பெண், என் தைரியம் எந்த அளவிற்கு சோதிக்கப்பட்டிருந்தால் இந்த முடிவுக்கு வந்திருப்பேன். நான் என் கருத்தை பிக்பாஸ் வீட்டில் வெளிப்படுத்தினேன், என்னை எவ்வளவு இழிவாக, கீழ்தரமாக பேச முடியுமோ அவ்வளவு பேசி என்னை முட்டாள் என்றார்கள் அங்கிருந்தவர்கள். கடைசியில் யார் முட்டாள் என தெரியப்படுத்த வேண்டும் என்று தான் இப்படி செய்தேன் என அவர் கூறியுள்ளார்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் கவின், அபிராமி, லாஸ்லியா, மதுமிதா மற்றும் முகின் ஆகியோர் இடம் பெற்று இருக்கின்றனர். இவர்களில் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என்று பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர்பாராத நேரத்தில் நடிகை மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கேப்டனாக இருக்கும் நிலையில் தற்போது, மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பது. காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.