கொழும்பு மோதர பகுதியில் தனது ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை தமிழ் பெண் செய்துள்ளார்.
விற்றமின் ஏ மாத்திரை கொடுத்து, பாலூட்டியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தாயார் குறிப்பிட்டிருந்தபோதும், பிரேத பரிசோதனையில் குழந்தை கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த 15ம் திகதி இரவு மோதரை அளுத் மாவத்தையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனது கணவர் பெரும் கடனாளியாகி விட்டதாகவும், அந்த மன உளைச்சல் காரணமாக குழந்தையை கொன்றதாகவும் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.