கிரீன்லாந்தை வாங்குவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பாக கிரீன்லாந்து அரசாங்கம் பதிலளித்துள்ளது.
டென்மார்க் முடியரசின் தன்னாட்சிப் பிரதேசமாக ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் கிரீன்லாந்து அமைந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து 8 லட்சத்து 11 ஆயிரம் சதுர மைல்கள் அளவிலான பரப்பை உள்ளடக்கியது. இந்த நிலையில் கிரீன்லாந்தை வாங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புவதாகவும், அதுதொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.இதனையடுத்து அடுத்து, தாங்கள் விற்பனைக்கு இல்லை என கிரீன்லாந்து அரசாங்கம் உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.