ஆண்நண்பரை வீட்டிற்கு அழைத்து தந்தையை தீர்த்து கட்டினேன்…. சிறுமியின் வாக்குமூலம்

இந்தியாவில் ஆண் நண்பருடன் சேர்ந்து தந்தையை கொலை செய்த மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(40). துணி வியபாரம் செய்து வரும் இவருக்கு, பெங்களூரு ராஜாஜி நகர் பகுதியில் சொந்தமாகக் கடை உள்ளது.

ஜெயக்குமார் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஜெயக்குமாரின் மனைவியும் மகனும் சென்றுள்ளனர்.

வீட்டில் ஜெயக்குமார் மற்றும் 15 வயது மகளும் மட்டுமே இருந்துள்ளனர்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுகிழமை காலை ஜெயக்குமாரின் வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வ்னத பொலிசார் மற்றும் தீயணைப்பு துறையினர், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, குளியலறையில் இருந்து புகை கசிந்ததால் அங்கு சென்று பார்த்துள்ளனர்.

அங்கு ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

இதையடுத்து இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், ஜெயக்குமாருடன் அவரின் மகள் இருக்கும் விவரம் தெரிந்தது.

அவரிடம் விசாரித்தபோது நான் அம்மா இல்லாததால் உறவினர் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றுவிட்டேன் எனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறியுள்ளார்.

சிறுமியின் பதிலில் பொலிசார் திருபதியடையாததால், அவரிடம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது சிறுமி தன் ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நானும் இதே பகுதியைச் சேர்ந்த ஒருவரும் நண்பர்களாகப் பழகி வந்தோம்.

இதை என் தந்தை கண்டித்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு என்னைக் கடுமையாகத் தாக்கினார். இதனால் அவர் மீது இருந்த ஆத்திரத்தில கொலை செய்ததாகத் கூறியுள்ளார்.

மேலும் சிறுமி சம்பவ தினத்தன்று தன் நண்பரை வீட்டிற்கு அழைத்துள்ளார். ஜெயக்குமாருக்குப் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அதன் பின் அவர் மயக்கமடைந்ததும் இருவரும் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

அவரது உடலில் 10 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. படுக்கையறை மற்றும் தரையில் இருந்த ரத்தக்கறையை இருவரும் சேர்ந்து சுத்தம் செய்துள்ளனர்.

தடயங்களையும் அழித்துள்ளனர். ஜெயக்குமாரின் உடலை வெளியில் எங்காவது தூக்கி வீசத்தான் இருவரும் முடிவு செய்துள்ளனர்.

உடலைக் கொண்டு செல்லும்போது மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தால் பாத்ரூமில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். சிறுமியும் அவரின் ஆண் நண்பரையும் (18 வயது) பொலிசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.