கணவர் செய்யும் காரியத்தால் தூக்கத்தை இழக்கும் மனைவி..!

தூக்கமில்லாமல் கஷ்டம் படுபவர்கள் ஒரு பக்கம் இருந்தால் தூக்கம் வந்தும் தூங்க முடியாத கொடுமை மிக பெரிய கொடுமை அது பெண்களுக்கு மட்டும்தான் நேரிடும். ஒவ்வொரு இரவுகளைக் கடப்பதில் அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது.

அதை சமீபத்தியக் கருத்துக் கணிப்பில் போட்டு உடைத்துள்ளனர். 2000க்கும் மேற்பட்ட ஜோடிகளிடம் ‘Bensons for Beds’ நிறுவனம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது.

அவர்களின் பதில்கள் மூலம் பெரும்பாலான பெண்கள் ஒவ்வொரு இரவும் குறைந்தது மூன்று மணி நேரமாவது தூக்கத்தை இழக்கின்றனர் என்பதை கண்டறிந்துள்ளனர். வருடத்திற்கு 105 மணி நேரங்கள் தூக்கத்தை இழக்கின்றனர்.

அதற்குக் மிக முக்கியக் காரணமாகப் பெரும்பாலானோர் தங்கள் கணவர் விடும் ‘குறட்டை’ சத்தம் தூக்கத்தை பாதிப்பதாகக் கூறியுள்ளனர்.

சிலர் கணவர் குறட்டை விட்டுத் தூங்கும்போது அவர் ஆழ்ந்து தூங்குகிறார் எனவே அவரை தொந்தரவு செய்யாமல் தன் தூக்கத்தை விட்டுக் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படி தூக்கமின்மையால் தான் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மிகவும் சோர்வானவர்களாக தோன்றுகின்றனர் என்றுக் கூறியுள்ளனர்.

ஆண், பெண் இருவருக்குமான தூக்கத்தின் தேவை நிச்சயம் மாறுபடும். அந்த வகையில் உடலின் தேவையைப் பூர்த்தி செய்வதுதான் நம்முடையக் கடமை.

குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்பகாலம், மாதவிடாய் முடிவுறும் காலம் இப்படி பல வகைகளில் உடலில் மாற்றங்கள், ஹார்மோன் சமநிலையின்மை அடிக்கடி நிகழும் அவர்களுக்கு கட்டாயம் போதுமான தூக்கம் அவசியம்.

இதை அவர்கள் புரிந்து கொண்டு நிம்மதியான தூக்கத்திற்கு தீர்வு காண்பது அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.