ரஷ்யாவில் 16 வயது பள்ளி சிறுவன் தன்னுடைய தாய், இரட்டை சகோதரர்கள், தாத்தா மற்றும் பாட்டி என 5 பேரை கோடரியால் வெட்டி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த திமூர் கிமலெட்டினோவ் என்கிற 16 வயது சிறுவன் கல்வியில் சிறந்தவனாக, பிராந்தியத்தில் நடைபெற்ற பல அறிவார்ந்த போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளான்.
இந்நிலையில், அச்சிறுவன் நேற்றைய தினம், தன்னுடைய குடும்பத்தை சேர்ந்த 5 பேரையும் கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிட்டு சிறுவனும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளான். கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்கொலைக்கு முன்னர் சிறுவன் எழுதி வைத்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் நெருங்கிய உறவினர் இறந்ததை நினைத்து தாத்தா விக்டர் (66) மற்றும் பாட்டி லிடியா (69) ஆகியோர் அழுதுகொண்டிருந்தது பாவமாக இருந்தது என குறிப்பிட்டிருந்தான்.
சிறுவனுடைய நண்பரிடம் விசாரித்த போது, இரட்டை குழந்தைகள் பிறந்த பின்னர் தாய் சரியாக தன்னை கவனிக்கவில்லை என திமூர் வேதனையுடன் கூறியதாக தெரியவந்துள்ளது.