பட்டப்பகலில் பெண் செய்த மோசமான செயல்..

சென்னையில் கடை முன்பு சாவியுடன் நிறுத்தி இருந்த முதியவரின் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற பெண்ணை பொலிசார் தேடி வருகிறார்கள்.

சென்னையை அடுத்த ஆலந்தூரைச் சேர்ந்தவர் நாகூர் மீரான்(65). நேற்று மதியம் இவர், தனது உறவினர்களை பார்ப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடிக்கு வந்தார். கடையின் முன்பு வண்டியை நிறுத்தி விட்டு, சாவியை எடுக்காமல் கடைக்குள் சென்றுவிட்டார்.

சிறிதுநேரம் கழித்து கடையில் இருந்து வெளியே வந்த நாகூர் மீரான், அங்கு நிறுத்தி இருந்த தனது வாகனம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அந்த கடையில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், அந்த வழியாக மற்றொரு மொபட்டில் ஹெல்மெட் அணிந்தபடி வரும் பெண் தனது வண்டியை எங்கேயோ விட்டு விட்டு நடந்துவந்து அக்கம் பக்கம் பார்த்துவிட்டு சாவியுடன் நிறுத்தி இருந்த நாகூர் மீரானின் வண்டியை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

தலையில் ஹெல்மெட் அணிந்தும், தோளில் பை மாட்டியும் நடந்து வரும் அந்த பெண், சுடிதார் அணிந்தபடி வருகிறார்.

இதையடுத்து, சிசிடிவி கமெரா பதிவுக் காட்சிகளுடன் பூந்தமல்லி காவல் நிலையத்துக்கு நாகூர்மீரான் சென்று இது குறித்து புகாரளித்தார்.

பொலிசார் கூறுகையில், அவர் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரின் முகம் சிசிடிவியில் பதிவாகவில்லை.

இருப்பினும் அவர் சென்ற இடங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம், அதே நேரத்தில் இளம்பெண், ஞாபக மறதி காரணமாக தவறுதலாக நாகூர் மீரானின் பைக்கை எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

விரைவில் வாகனத்தை பைக்கை கண்டுபிடித்து விடுவோம் என கூறியுள்ளனர்.