இரவு நேரத்தில் ஆசை காட்டிய மனைவி.! கணவனுக்கு நேர்ந்த கதி.!

மதுரையில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த தென்னரசு ரணபவர் அதே பகுதியில் ஒர்க்சாப் ஒன்றை நடத்தி வந்துள்ளர். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கின்றனர்.

இவரது வொர்க் ஷாப்பில் சரவணக்குமார் என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த நேரத்தில் அவருக்கும், விஜயலட்சுமிக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் நாளடைவில் தென்னரசுவுக்கு தெரிந்து இருவரையும் கண்டித்துள்ளார். இதன் காரணமாக விஜயலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடவே, பின்னர் திரும்பி வந்து கணவருடன் வாழ்ந்துள்ளார்.

ஜெய்ஹிந்த்புரத்திலேயே மற்றொரு பகுதிக்கு சென்று இவர்கள் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இருப்பினும் இருவரது பழக்கமும் தொடர்ந்துள்ளது. இவர்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் தென்னரசுவை தீர்த்துக்கட்ட கள்ளகாதலர்கள் இருவரும் முடிவு செய்தனர்.

இதனால், கடந்த 14-ந்தேதி அன்று தென்னரசுவை அதிகப்படியான மதுவை குடிக்க செய்யவுள்ளனர். பின்னர் அவர் மயக்க நிலைக்கு செல்லவே, இருவரும் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் மறுநாள் காலை உறவினர்களிடம் அவர் மஞ்சள் காமாலை முற்றி தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். உடல் பரிசோதனை செய்யப்பட்டு தென்னரசுவின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், அவரது மனைவியிடம் தீவிர விசாரணை நடத்தியதில் தென்னரசு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக விஜயலட்சுமி மற்றும் கள்ளக்காதலன் சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.