பாகிஸ்தானில் துண்டு போட்டு, குண்டு போட்ட ஸ்டாலின்.!

பாகிஸ்தானே பாராட்டும் அளவிற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு காரியத்தை கையில் எடுத்து இருக்கிறார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அதுதான் உண்மை.

சிறிது நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா நிறுத்தியது. ஜம்மு காஷ்மீர் பிரிந்து இருந்ததை ஒன்றாக்கிய மத்திய அரசினை பலர் பாராட்டியும், ஒரு சிலர் வரையறை இன்றி விமர்சித்தும் வந்தனர். அதன் பின்னர் ஜம்மு காஷ்மீர் பாஜக எம்பி ஒருவர் பாராளுமன்றத்தில் திமுக எம்பி காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு கருத்துக்கள் கூறியது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஜம்மு-காஷ்மீர் சம்பவத்திற்கு எதிராக போராட்டத்தை அறிவித்துள்ளார். மேலும், தமிழக எம்பிகள் இந்தியா முழுவதும் நடக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் குரல் கொடுப்பர் என்று கூறி வருகிற 22-ஆம் தேதி தனது தலைமையில் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக ரேடியோ பாகிஸ்தான் என்ற பாகிஸ்தானின் ஊடகம் ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினின் போராட்டத்தை வரவேற்கும் விதமாக கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளது.

அந்த கருத்தில்,” 2019 எலக்சன் இல் இந்தியாவின் மூன்றாவது கட்சியான திமுக நரேந்திர மோடியின் அரசுக்கு எதிரான ஜம்மு காஷ்மீர் போராட்டத்தை அறிவித்து உள்ளது.” என்று அதில் திமுக தலைவர் ஸ்டாலின் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளது.

இதற்கு உடன் பிறப்புகள் பலரும் பாராட்டி வந்தாலும், இது திமுகவினர் யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் என்பதால் பல்வேறு தரப்பினரும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். பலரும் இதனை கலாய்த்து தள்ளி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.