நிர்வாண புகைப்படங்களை வைத்து கணவர் செய்த கொடுமைகள்…

ஜார்கண்டைச் சேர்ந்த பெண், தன்னிடம் ஹிந்து என பழகிய நபர் நிர்வாண புகைப்படங்கள் எடுத்து அதை வைத்து மிரட்டி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது முத்தலாக் கூறி விவகாரத்து செய்துள்ளார் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், நான் ராஞ்சியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். அப்போது அங்கு பணிபுரிந்த, சோனு என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

ஹிந்து என்று கூறி அவர் என்னுடன் பழகினார். ஒரு நாள், உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருந்துகள் வாங்கித் தந்தார். அந்த மருந்தை சாப்பிட்ட பின் மயங்கியுள்ளேன்.

சிறிது நேரம் கழித்து விழித்து பார்த்தபோது, ஒரு அறையில் முழு நிர்வாணமாக இருந்தேன். அப்போது வந்த சோனு, நான் நிர்வாணமாக இருக்கும் மற்றும் வேறு சிலருடன் இருப்பது போன்ற படங்களை, தனது மொபைலில் எடுத்துள்ளதாக கூறி மிரட்டி, அடிக்கடி கட்டாய உறவு வைத்துக் கொண்டார். வேறு சிலரையும் அழைத்து வந்து, கட்டாய உறவு வைத்துக் கொள்ள செய்தார்.

இதைத் தொடர்ந்து திடீரென்று ஒருநாள் என்னை மசூதிக்கு அழைத்துச் சென்ற அவர், அங்கு அவர்கள் கூறுவது போன்று செய்யும் படி கூறினார்.

நானும் அவர்கள் சொன்னது போன்று செய்தேன், பின் என்னிடம் இஸ்லாம் மாதத்திற்கு நீ மாறியுள்ளதாக கூறினார்.

ஏன் இஸ்லாம் மாதத்திற்கு மாற்றினீர்கள் என்று கேட்ட போது, அவர் ஹிந்து இல்லை, உண்மையான பெயர், முகமது அப்துல் கைஷ் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் என்னை டில்லிக்கு அழைத்துச் சென்றார். அங்கும், பலருடன் கட்டாய உறவு வைத்துக் கொள்ளும்படி மிரட்டி வந்தார். கடந்த, ஆறு ஆண்டுகளாக இப்படி அவரால் பல கொடுமைகளை அனுபவித்து வந்தேன்.

இந்நிலையில், சமீபத்தில், முத்தலாக் கூறி, விவாகரத்து செய்துவிட்டதாக கூறியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார், சோனு குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.