முதலமைச்சர் எடப்பாடிக்கு அடித்த அதிர்ஷ்டம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் இ.பி.எஸ்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி இரு அணியாக பிரிந்தது. ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. பின்னர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பிறகு கட்சி பொறுப்பு ஓபிஎஸ் இடமும், ஆட்சி பொறுப்பு இபிஎஸ் இடமும் உள்ளது. தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

40 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் தரக்கூடிய அத்திவரதர் நிகழ்வின்போது முதலமைச்சராக இருந்த பெருமையும் எடப்பாடி பழனிசாமி கிடைத்துள்ளது.

அத்திவரதர் வைபவ கல்வெட்டிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த கல்வெட்டு அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எந்த முதலமைச்சரின் பெயரும், இந்த கல்வெட்டில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.