போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல்..

லண்டனுக்கு செல்லும் விமானத்தில் குடிபோதையில் 8 வயது சிறுவனை தண்ணீர் போத்தலால் அடித்து ரகளையில் ஈடுபட்ட பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லூயிஸ் டிக்சான் (51) என்ற பெண் கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி அமெரிக்காவின் மியாமியில் இருந்து லண்டனுக்கு செல்லும் விமானத்தில் ஏறினார்.

விமானத்தில் ஏறும் போதே அதிகளவு மது குடித்துவிட்டு போதையில் இருந்த லூயிஸ் அருகில் உட்கார்ந்திருந்த பெண் பயணியை அடிக்க கை ஓங்கினார்.

இதே போல இன்னொரு பயணியையும் அடிக்க போனார், மேலும் வினோதமான செயல்களை செய்த லூயிஸ் தண்ணீர் போத்தலை கொண்டு 8 வயது சிறுவன் மீது வீசினார்.

இது குறித்து சிறுவன் தாய் கூறுகையில், லூயிஸ் வேகமாக வீசிய போத்தல் என் மகன் தலையை பதம் பார்த்தது என கூறினார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட லூயிஸ் கையில் கைவிலங்கு மாட்டப்பட்டு விமானத்தில் உட்காரவைக்கப்பட்டார்.

விமானமானது லண்டனுக்கு வந்ததும் அவரை பொலிசார் அழைத்து சென்றனர்.

லூயிஸ் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவருக்கு 8 மாதங்கள் சிறை தண்டனையும், மதுவுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மைய வகுப்புக்கு 25 நாட்கள் செல்லவும் உத்தரவிடப்பட்டது.

இதோடு 200 மணி நேரம் சமூக சேவை செய்யவும், லூயிஸால் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு அவர் தலா £400 கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி கூறுகையில், சிறுவன் உள்ளிட்டவர்களிடம் மோசமாகவும், பொறுப்பற்ற முறையிலும் லூயிஸ் நடந்து கொண்டது பெரிய தவறு என கூறியுள்ளார்.

இது குறித்து லூயிஸ் கூறுகையில், நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன், இது போல இனி எப்போதும் நடந்து கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.