ஹிஸ்புல்லா… ஜனாதிபதி வேட்பாளராக!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண புத்திஜீவிகள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தன்னைக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும் இந்த தீர்மானம் குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் இறுதி தீர்மானத்தை அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் முஸ்லிம் புத்தி ஜீவிகள் மற்றும் அமைப்புக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் பரந்தளவிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததன் பின்னரே இந்த விடயம் குறித்து உறுதிப்படக் கூற முடியும்.

அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஏகமனதாக கோரிக்கை விடும் பட்சத்தில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.