அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் அமைந்துள்ள ஏரியில் மூழ்கி 27 வயது இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த 27 வயதான சுமேத் மன்னார் அமெரிக்காவிலுள்ள ஓரிகன் மாகாணத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார்.
இவர் ஓரிகன் பகுதியிலுள்ள கிரேடர் ஏரிக்கு கடந்த ஞாயிற்றுகிழமை சென்றுள்ளார். பின்னர் குறித்த ஏரியின் ஜம்பிங் ராக் என்ற இடத்திற்கு அவர் சென்றதாக கூறப்படுகிறது.
25 அடி உயரம் கொண்ட அந்த பகுதியில் இருந்து சுமேத் ஏரியில் குதித்துள்ளார். ஏரியில் குதித்து சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர் வெளியே வராததால் இவரை அதிகாரிகள் தேடியுள்ளனர்.
மேலும் சுமேத் குதித்த பகுதியானது தடை செய்யப்பட்ட பகுதியும் அல்ல என கூறப்படுகிறது.
மட்டுமின்றி கோடை காலங்களில் அந்த ஏரியின் மேற்பகுதியானது சுமார் 15 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருக்கும் எனவும்,
பொதுவாக அந்த ஏரி அமைந்த பகுதியில் 3 டிகிரி வெப்பமே அனுபவப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அவர் இந்த ஏரியில் மூழ்கி உயிரிழந்திருப்பார் என்று அதிகாரிகள் கருதியுள்ளனர்.
இருப்பினும் அவரது உடலை தேடும் பணியில் அதிகாரிகள் தரப்பு தீவிரமாக இருந்துள்ளனர். இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பிறகு அவருடைய உடலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அத்துடன் அவர் மூழ்கி இறந்தற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.