எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை, அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என்று ஜெ. தீபா நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுக நிலைக்க வேண்டும் என்று விரும்பினார்.
இதனால் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை, அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக ஜெ. தீபா தெரிவித்தார். அதிமுகவில் எந்த பதவியும், பொறுப்பும் வேண்டாம் எனவும் கூறினார். நான் என்றும் ஜெயலலிதா விசுவாசியாக இருப்பேன். அதிமுகவில் இணையும் எனது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை அதிமுக தலைமைக்கு தர இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் அதிமுக தமைமையான ஓபிஎஸ், இபிஎஸ்க்கு அதிர்ச்சி தரும் விதமாக ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை சட்டப்படி மீட்டு எடுப்பேன் என தெரிவித்துள்ளார். போயஸ் இல்லம் எங்களின் குடும்ப சொத்து. அரசின் சொத்து கிடையாது. அதிமுக சொத்து கிடையாது.
அது எங்களுக்கு சொந்தமானது. போயஸ் இல்லத்திற்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.