குழந்தையை கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி!

அமெரிக்காவில் சட்டனூகா நகரத்தில் டென்னசி பகுதியில் 2  வயதான பெண் குழந்தையை வளர்ப்பு பாட்டி கொதிநீரில் போட்டு காயங்களுக்குள்ளாக்கிய கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குழந்தையின் கால்களை கொதிக்கும் நீரில் போட்ட பின் சிவப்பு காயங்கள் மற்றும் கொப்புளங்கள் கணுக்கால் முதல் கால்விரல்கள் வரை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற அன்று குழந்தையை தாய் வளர்ப்பு பாட்டியிடம் விட்டுவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

குழந்தை தவறாக நடந்து கொண்டமைக்கு தண்டனை கொடுப்பதற்காக வளர்ப்பு பாட்டி குழந்தைக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குழந்தைக்கு காயத்தை ஏற்படுத்திய பின் வளர்ப்பு பாட்டி தாயிற்கு அழைப்பு எடுத்த வீட்டிற்கு வரும் படி கூறிய போது குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது.

வீட்டிற்கு வந்து தாய்  குழந்தையை பார்த்தபோது மகள் வேதனையுடன் அழுவதைக் கண்டு  வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

வைத்தியாசாலையில் குழந்தையின் காயங்களைஅவதானித்த வைத்தியர்கள்  இரு கால்களிலும்  ஒரே மாதிரியாக அதிர்ச்சியளிக்கும் காயங்கள் வேண்டும் என்றே ஏற்படுத்தப்பட்டவை என தெரிவித்துள்ளனர்.

பின்னர் குழந்தைக்கு தோல்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால் கால்களை இழக்க நேரிடும் என்று வைத்தியர்கள் தாயை எச்சரித்துள்ளனர்.

அடுத்த வாரம் குழந்தையின் தொடையில் இருந்து சிறிது சதையை எடுத்து அறுவை கிசிச்சை செய்யவுள்ளதுடன் குறித்த குழந்தை மிகவும் நோய்த் தொற்றுக்கான ஆபத்திலுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை பராமரிப்பாளராக இருந்த வளர்ப்புப் பாட்டி  கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீது  மோசமான குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் 150,000 பவுண் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.