இலங்கை வந்த தாய் – மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கைக்கு வந்திருந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் இன்று தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

தங்காலை கடலில் உயிருக்கு போராடிய நிலையில் தாயையும் மகனையும் கடல் பாதுகாப்பு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

பிரித்தானியாவிலிருந்து சுற்றுலா வந்த 49 வயதுடைய பெண் மற்றும் 31 வயதுடைய அவரது மகன் ஸ்டீவ் ஆகிய இருவரே காப்பாற்றப்பட்டுள்ளனர்.

தங்காலை மெடில்ல பிரதேச சுற்றுலா ஹோட்டலில் தங்கிருந்த நிலையில் கடலில் குளிப்பதற்காக சென்ற போது அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடல் இன்று கொந்தளிப்பாக காணப்பட்டமையினால் அவர்கள் நீந்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் போது தாயும் மகனும் அபாயகுரல் ஏழுப்பி உதவி கோரியுள்ளனர்.

உடனடியாக செயற்பட்ட கடற்பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.