உலகையே உலுக்கிய ரஷ்ய கடலுக்கு அடியில் நடந்த மர்மம்!

ரஷ்யாவில் இம்மாத தொடக்கத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டுள்ளார்.

வடக்கு ரஷ்யாவில் கடந்த ஆகத்து 8ம் திகதி பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பிராந்தியத்தில் கதிர்வீச்சு பரவி பலர் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உலக நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தியது. அணு ஆயுத சோதனையின் போது குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், ஹெல்சின்கியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், கடந்த ஆகத்து 8ம் திகதி வடக்கு ரஷ்யாவில் ஒரு இராணுவத் தளத்தில் ஒரு பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறினார்.

குண்டுவெடிப்பு ராணுவ தொடர்புடைய காரணமாக எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியவில்லை, ஆனால் இதுபோன்ற விபத்துக்கள் பற்றிய தகவல் பரிமாற்றங்களை மேம்படுத்த வேண்டும், ராணுவ தொடர்புடைய செயல்கள் குறித்த தகவல்களை அணுக சில கட்டுப்பாடுகள் உள்ளன என்று புடின் கூறினார்.

ஆகத்து 8ம் திகதி குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் எந்த ஆயுத அமைப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பதை அவர் வெளியிடவில்லை.

மேலும் அவர் கூறியதாவது, இது ராணுவத் துறையின் பணி, ஆயுத அமைப்புகளுக்கு உறுதியளிக்கும் வேலை. நாங்கள் இதை மறைக்கவில்லை, நாங்கள் எங்கள் சொந்த பாதுகாப்பைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கதிர்வீச்சு அளவு அதிகரிக்கும் அபாயம் இல்லை என்றும் தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் புடின் குறிப்பிட்டார்.