பிக்பாஸில் முகேன் அபிராமியின் மீது இருந்த பிரியத்தின் காரணமாக, கடும் கோபம் கொண்ட நேரத்தில் தான் அமர்ந்திருந்த கட்டிலை சேதப்படுத்தினார்.
அப்பொழுது இது மிகவும் பெரிய விஷயமாக பேசப்பட்டது. மேலும், இந்த விஷயம் நகைச்சுவை விஷயமாகவும், விவாத பொருளாகவும் மாறியதை நாம் கவனித்திருப்போம். இதன் காரணமாக முகேன் தண்டிக்கப்படுவாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.
இந்த சந்தேகத்திற்கு பதிலளிக்கும் வகையில், கடந்த சீசனின் பங்கேற்ற போட்டியாளர் டேனி தனது பேட்டி ஒன்றில், “பிக்பாஸ் அக்ரிமெண்ட்டில், எனக்கு கொடுக்கப்பட்ட விஷயத்தை தான் நான் இப்பொழுது கூறுகின்றேன். பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி செல்லும்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூறப்படும்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொருட்களை சேதப்படுத்தினால் அபராதம் நிச்சயம் இருக்கின்றது. இந்த அபராதமானது கிட்டத்தட்ட 50 ஆயிரத்தில் இருந்து 50 லட்சம் வரை போடப்படும். என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக முகேன் வெளியேறும்போது அவருக்கு அபராதம் போடப்படுவது உறுதி என தெரிகிறது.
இது போலத்தான், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி பல நாள் ஆனா பின்னும் மதுமிதா இன்னும் வாய் திறக்காமல் இருக்கின்றார். இதுவும் அந்த அக்ரிமென்டில் இருக்கின்றது. அங்கிருந்து அனுமதி வராமல் எந்த பேட்டியும் கொடுக்க முடியாது.” என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.