யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பிரிவு 3ம் ஆண்டு மாணவனுடன் கனடாவிலிருந்து யாழ் வந்த 41 வயதான குடும்பப் பெண் மாயமாகியுள்ளதாக பெண்ணின் கணவரால் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரத்துக்கு முதல் நல்லுார் திருவிழாவுக்குச் செல்வதற்காக இலங்கை போவதாக குறிப்பிட்டு குறித்த பெண் இலங்கை வந்துள்ளார்.
தனது இரு பிள்ளைகளையும் கணவருடன் விட்டு விட்டே வந்ததாகவும் தெரியவருகின்றது. இலங்கை வந்த பின்னர் கணவர், பிள்ளைகளுடன் இவரது தொடர்பு இல்லாது போயுள்ளது.
குறித்த பெண்ணின் அக்கா யாழில் வசித்து வந்த நிலையில் கணவர் அக்காவுடன் தொடர்பு கொண்டு மனைவி தொடர்பாக அறிய முற்பட்டுள்ளார்.
தனது வீட்டுக்கு தங்கை வரவில்லை என்று அக்கா பதில் சொல்லியதுடன் தனது தங்கையை தேடத் தொடங்கியுள்ளார்.
முதலில் அவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டிருக்கலாம் என நினைத்து பொலிசாரிடம் முறையிட்டுள்ளார் அக்கா.
இதே வேளை தன்னை தனது அக்கா தேடுகின்றார் என அறிந்த தங்கை தனது அக்காவுடன் தொடர்பு கொண்டு தனது கணவருடன் வாழப்பிடிக்கவில்லை என கூறியதுடன் தான் கொழும்பில் நிற்பதாகவும் சந்தர்ப்பம் வரும்போது சந்திப்பதாகவும் கூறியதால் பொலிசாரிம் சென்று அக்கா முறைப்பாட்டை மீளப்பெற்றதுடன் கணவருக்கும் இது குறித்து தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் மனைவி கனடா தொலைபேசி இலக்கத்தில் முகப்புத்தகத்தை பதிவு செய்திருந்ததால் கணவரால் இலகுவாக அந்த தொலைபேசியில் அனுப்பபட்ட கடவுச் சொல்லை வைத்து உள்நுழைந்து பார்க்க முடிந்துள்ளது.
அதில் மனைவி யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவனுடன் மிக அந்தரங்கமான முறையில் கருத்துப்பரிமாற்றங்கள் மற்றும் அந்தரங்க புகைப்படப்பரிமாற்றங்கள் செய்துள்ளதை கண்டு அதிர்ந்துள்ளார்.
இந் நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன் கணவர் கொழும்பு வந்து குறித்த முகப்புத்தக ஆதாரங்களுடன் பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நுண்கலைப்பிரிவு மாணவன் வன்னியைச் சேர்ந்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.