நடிகர் விஷால் எப்போது திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பதில் அளிக்கும் விதத்தில் அவர் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா அல்லா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
அக்டோபரில் திருமணம் என கூறப்பட்டது, ஆனால் தற்போது திருமணம் நின்றுவிட்டதாக சினிமா துறையில் பேச்சு அடிபடுகிறது. அனிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷால் தொடர்பான புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார்.
அதனால் திருமணம் நின்றுவிட்டது என செய்தி பரவுகிறது. இதுவரை இருவீட்டாரும் இது பற்றி எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.