உளவுத்துறை அதிர்ச்சி தகவல்…..! குவிக்கப்பட்ட போலீஸ்.!

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரித்துள்ளனர்.

இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தமிழகத்திலும் ஊடுருவியிருப்பதாக தமிழக டிஜிபிக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை தகவலால் தமிழாக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இவர்கள் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டுள்ளனர். கோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கோவை முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசாருக்கு எச்சரிக்கையில் உள்ளனர். 6 பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் 5 பயங்கரவாதிகள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.