ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அங்கு ஊரடங்கு உத்தரவு, அரசியல் தலைவர்களுக்கு வீட்டுக்காவல் என பல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த வகையில் காஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்கும், அரசியல் கட்சி தலைவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்பிகளும் டெல்லியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி நேற்று ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது .இந்த போராட்டத்தில் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், டி. ராஜா, கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் திமுக நடத்திய போராட்டம் குறித்து பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவு செய்தவை, குரங்குக்கு முன்னாடி கஞ்சி கலையத்தை வைத்தால் அது கை வைக்காது. குட்டியோட வால விட்டு பார்க்கும். குட்டி கத்தினா கஞ்சி சூடா இருக்கு என்று குரங்கு கை வைக்காது. இல்லேனா குரங்கு கஞ்சிய குடிக்க துவங்கும். இதுக்கும் டில்லி ஜந்தர் மந்தரில் ஸ்டாலின் அறிவிச்ச போராட்டத்திற்கும் தொடர்பில்லை என்று பதிவு செய்துள்ளார்.
குரங்குக்கு முன்னாடி கஞ்சி கலையத்தை வைத்தால் அது கை வைக்காது. குட்டியோட வால விட்டு பார்க்கும். குட்டி கத்தினா கஞ்சி சூடா இருக்கு என்று குரங்கு கை வைக்காது. இல்லேனா குரங்கு கஞ்சிய குடிக்க துவங்கும். இதுக்கும் டில்லி ஜந்தர் மந்தரில் ஸ்டாலின் அறிவிச்ச போராட்டத்திற்கும் தொடர்பில்லை
— H Raja (@HRajaBJP) August 22, 2019