கட்டுநாயக்காவில் சிக்கிய வெளிநாட்டு யுவதியும் – இளைஞனும்?

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வழியாக பிரான்ஸிற்கு பயணம் மேற்கொள்ள முயற்சித்த ஈரானிய பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து 28 வயதுடைய ஈரானிய பெண்ணும் , 18 வயதுடைய ஈரானிய ஆண் ஒருவரும் நேற்று கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

தாம் சுற்றுலாப் பயணிகள் என தெரிவித்தே இவர்கள் இலங்கை வந்துள்ளதோடு , இவர்கள் பிரான்ஸ் நாட்டினர் என விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் ஆவணத்தில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களின் தரவுகளை கணினி மூலம் சோதனை செய்ததில், அவர்கள் இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

சட்டவிரோத முறையில் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டில் தங்கும் நோக்கிலேயே இவர்கள் இருந்துள்ளதாகவும் , போலி ஆவணங்கைள அதிகாரிகளிடம் காட்டி தப்பித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்களின் உடமைகளை சோதனையிட்டபோது, அதில் ஈரான் பாஸ்போர்ட் இரண்டு மீட்கப்பட்டன. அந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தியே விமானப்பயணம் செய்துள்ளனர்.

தற்போது இவர்கள் இருவரையும் விசாரணை செய்து வரும் அதிகாரிகள், விரைவில் அவர்களை நாடு கடத்தவுள்ளனர்.