உலகில் பல விதமான முறையில் மக்கள் பரிதாபமாக தங்களின் உயிர்களை இழந்து வருகின்றனர். இந்த நிலையில்., பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தால் மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வரும் செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் கடந்த சில வருடமாக ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுமட்டுமல்லாது அப்பாவி பொதுமக்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி., அவர்களின் மீது வன்முறை தாக்குதலிலும் ஈடுபட்டு மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அந்நாட்டில் இருக்கும் அரசுபடை மற்றும் அமெரிக்க நாட்டின் கூட்டுப்படைகள் இணைந்து பயங்கரவாதிகளை தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக இராணுவத்தினருக்கும் – பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான தாக்குதலானது நடந்து வருகிறது. அந்நாட்டில் இருக்கும் வடக்கு பகுதியான பாலஹா மாகாணத்தில் இருக்கும் சாரா மாவட்டத்தில் உள்ள பகுதியில் தாலிபான்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த இராணுவத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மேலும்., தகவல் வந்த சம்பவ இடத்தில் இருக்கும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை குறிவைத்து வான்வழியாக தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் மொத்தமாக 20 தலிபான் பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டனர். இது மட்டுமல்லாது அங்கிருந்த வாகனங்கள், பயங்கர ஆயுதங்கள் மற்றும் பதுங்கியிருக்கும் குழிகள் முற்றிலும் அழிக்கப்பட்டன.