அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வாழ்ந்து வரும் இளம்பெண் மிராண்டா. இவர் தனது குடும்பத்தினருடன் எல்லோ ராக் என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அந்தப் பகுதியில் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான வைரங்கள் கிடைத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்.
அதை கேட்டு ஆச்சரியம் அடைந்த பெண் அவளது நண்பர்களிடம் இதை பற்றி பேசினால். அவரின் பேச்சை கேட்டு அவள் நண்பர்களும் நீ அதே பகுதியில் தேடி பார்த்தால் உனக்கும் வைரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள். இவளுக்கும் ஆசை வந்துவிட்டது, வைரம் எடுக்கும் முடிவுக்கு வந்துள்ளாள்.
வைரம் எடுப்பதற்காக அவர் யூடியூப்பில் சில வீடியோக்களை பார்த்துள்ளார். வைரக்கல் எப்படி எடுப்பது என்று பார்த்துக் கொண்டிருந்த மிராண்டாவுக்கு, அவர்கள் சொன்ன வழிமுறையின் படி கடற்கரையில் தேடியுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவரது கண்ணில் 73 காரட் எடை கொண்ட வைரக்கல் கிடைத்தது.
இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த மிராண்டா, அந்த கல்லை எடுத்து சென்று டைமென்ட் டிஸ்கோவேரி சென்டரில் இதன் உண்மை தன்மையை ஆராய்ந்து உண்மையான வைரம் என்று அறிந்து மேலும் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அதை விற்காமல் மோதிரமாக அணியவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.