யாழ்ப்பாணம் பாடசாலை மாணவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வீதியில் பழங்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டதனை கண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடும் கோபமடைந்துள்ளார்.
உடுவில்-சண்டிலிப்பாயை இணைக்கும் பகுதியில் 13 வயதுடைய மாணவர் பழங்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டார்.அவ்வீதியில் வருகை தந்த குறித்த சிறுவனை பார்த்து வயதை வினவியபோது 13 வயது எனவும் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து கல்வி ராஜாங்க அமைச்சர் உடனடியாக அவனுடைய பெற்றோரை அழைத்து “பாடசாலை மாணவர்கள் வீதியிலோ அல்லது வேறு வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் இந்த விடயத்தில் கவனத்தில் எடுக்க வேண்டும். உங்களுக்கு பிரச்சினை இருப்பின் நாங்கள் பதில் பெற்றுத்தருவோம்.பாடசாலை மாணவர்கள் எவரும் வீதியிலோ வியாபார நடவடிக்கையில் ஈடுபட முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த மாணவனை உடனடியாகவே வீட்டுக்கு அனுப்பி வைக்க கல்வி ராஜாங்க அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார்.