பிக்பாஸில் அபிராமி வெளியேறுவதற்கு முன்னர் எலிமினேட் ஆனவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் வீட்டில் இவர் கவீனை ஒருதலையாக காதலித்து வந்தார். கவீனும் பதிலாக காதலிப்பது போல் இருந்தாலும் கடைசியில் சாக்ஷியை ஏமாற்றிவிட்டு லொஸ்லியா பக்கம் திரும்பினார்.
இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள சாக்ஷி அதில், உண்மையை சொன்னால், நான் கவினை ஒரு நல்ல நண்பனாக கருதி வந்தேன். ஆனால் இனி இல்லை. ஒரு நண்பர் வேண்டுமென்றே உங்களை தாழ்த்தவோ அல்லது தீங்கு செய்யவோ மாட்டார். நான் மிக சரியானவள் என்று சொல்லவில்லை. குறைந்த பட்சம், அவர் விளையாடியதை போல நான் வேடிக்கையான விளையாட்டுகளை விளையாடவில்லை.
என்னவாக இருந்தாலும், கவின் எனக்காக இருப்பார் என்று நினைத்தேன். நான் தவறு செய்த இடம் அதுதான். முதலில், அவர் என்னை மூளை சலவை செய்தார். இப்போது லொஸ்லியா. குறைந்தபட்சம் ஒரு பெண்ணுடனாவது அவரால் நேர்மையாக இருக்க முடியுமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.