உலகின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகள் பற்றி எரிந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பிரேசிலின் அமேசான் காடுகளில் 9,500 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு தீக்கிரையாகி வருகின்றன. அமேசானில் பயங்கர தீ பற்றி எரிவதற்கு முக்கியக் காரணம் மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்து வருபவர்கள் அதிக அளவில் மாட்டு இறைச்சியை உண்பதுதான் என்று கூறப்படுகிறது.
அமேசான் காடுகளில் ஏற்படும் காட்டு தீ விபத்து என கூற முடியாது என சர்வதேச அளவில் விவாதங்கள் கிளப்பியுள்ளது. பெரும்பாலும் அமேசான் காடுகளில் ஏற்படும் தீ விபத்து சம்பவங்கள்அனைத்தும் விபத்துகள் அல்ல, கால்நடைகளை மேய விடுவதற்காக நிலங்களை ஆக்ரமிப்போரால் தீ மூட்டப்படுகிறது இதனால் தான் அமேசான் காடுகளில் காட்டு தீ ஏற்படுவதற்கு காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்னர்.
அமேசான் காடுகள் பற்றி எரிந்து வருவது பிரேசிலில் உள்ள மாட்டிறைச்சி வியாபாரிகளுக்கு இது ஒரு பெரிய விஷயமாக இல்லை .ஆனால் உலக நாடுகள் அனைத்தும் இதனை பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. பூமியின் சுவாசிக்கும் இருதயமாக கூறப்படும் மழைக்காடுகள் உலகிற்கு தேவையான பிராண வாயுவில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன. அந்த வகையில் அமேசான் காடு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.
உலக நாடுகளின் சுவாசிக்கும் இருதயமாக கருதபப்டும் அமேசான் காட்டை எப்படி பாதுகாப்பது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆலோசித்து வருகின்றனர். குறைவான இறைச்சியை உண்ணுங்கள் எனக் கூறுவது தான் இதற்கு பதில். பிரேசிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஐரோப்பிய யூனியனிடம் மிக கடுமையாக வலியுறுத்தி வருகின்றனர்.