ஆந்திரா – தெலுங்கானா பிரிக்கப்படுவதற்கு முன்பு, தெலுங்கானா பகுதியில் இருந்த 460 கிராமங்கள் மற்றும் 2 நகரங்களின் பெயர்கள் அரசு குறிப்பேட்டில் இருந்து காணாமல் போனதாக தெரித்துள்ளார்.
மத்திய உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சகமும், மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனரகமும் 2011 மக்கள்தொகை புள்ளி விவரத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், தெலுங்கானாவில் இருந்து இப்பகுதிகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த 460 கிராமங்களும், 2016 அக்டோபரில் தெலுங்கானா அரசு பொறுப்பேற்று மாவட்டங்கள் பிரிக்கும் போது உருவாக்கப்பட்ட 14 புதிய மாவட்டங்களின் கீழ் இந்த கிராமங்கள் வருகின்றது. இத்தனை கிராமங்கள் மாயமாகி இருப்பது பற்றி விளக்கம் அளிக்கும்படி தெலுங்கானா அரசிடம், மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
நிஜத்தில் இருக்கும் இந்த 460 கிராமங்கள் மற்றும் 2 நகரங்களின் பெயர்கள் அரசு பதிவேட்டில் இருந்து விடுபட்டது அல்லது நீக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.