இரவு நேரத்தில் உல்லாசத்திற்கு அழைத்து விட்டு கள்ளகாதலன் தூங்கியதால் காதலி எடுத்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி சேர்ந்த தைஜா ரஸ்ஸெல் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் அந்த இளைஞர் ரஸ்ஸலை உறவிற்கு அழைத்துள்ளார். ஆனால் ஆண் நண்பரின் வீட்டிற்கு வந்த பொழுது அவர் கடுமையான உறக்கத்தில் இருந்துள்ளார்.
இதைப்பார்த்த ரஸ்ஸெல் மிகுந்த கோபம் கொண்டுள்ளார். பின்னர் ரஸ்ஸெல் எழுப்பி உறவிற்கு அழைத்த பின்னரும் அவர் உறக்கத்திலேயே இருந்துள்ளார். இதனால் மிகவும் கோபமடைந்த ரஸ்ஸெல் அவரை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கிருந்து வெளியேற நினைத்துள்ளார். அவர் வெளியேறும் போதும் அவரை சமாதானப்படுத்தாமல் ஆண் நண்பர் உறங்கிக் கொண்டே இருக்க ரஸ்ஸெல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தார்.
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ரஸ்ஸெல் தனது ஆண் நண்பர் பதறியடித்துக்கொண்டு வெளியேறும் காரியம் ஒன்றை செய்துள்ளார். அங்கிருந்து வெளியேறி பெட்ரோலை வாங்கி அவர் தூங்கிக் கொண்டிருந்த வீட்டின் மேல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த தீயானது எரியத் தொடங்கியதும் அங்கிருந்து ரசெல் வெளியேறியுள்ளார்.
சிறிது நேரத்தில் தீயின் தாக்கத்தால் உறங்கிக்கொண்டு இருந்த ஆண் நண்பர் விழித்து பார்க்க பதறி அடித்து வீட்டின் ஜன்னலை உடைத்துக்கொண்டு வெளியேறி உள்ளார். இந்த சம்பவமானது அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றுள்ளது. காவல்துறையினர் விசாரணையில் இருவருக்குமான உறவு தெரிய வந்துள்ளது.