முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல்நிலை குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் காலமானார்.
கடந்த ஆட்சியின் போது மோடி தலைமையிலான அரசில் மத்திய நிதி அமைச்சராக பணியாற்றியவர் அருண் ஜெட்லி. கடந்த ஆண்டு ஆட்சி முடியும் தருவாயில் அடிக்கடி உடல்நிலை குறைவால் அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். மேலும் கடந்த லோக்சபா தேர்தலில் கூட அவர் போட்டியிட வில்லை
கடந்த 9 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டார். கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அருண் ஜெட்லீ எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறைந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தற்போது பிரதமர் மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக மூன்று நாடுகளுக்கு சென்றுள்ளார். அவர் இன்று ஐக்கிய அரபு நாட்டில் இருக்கிறார். ஜெட்லி மறைந்த செய்தி கேட்ட மோடி, ஜெட்லியின் மனைவி சங்கீதா மற்றும் மகன் ரோகனிடம் பேசி ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தார். அப்போது அவர்கள் நீங்கள் சுற்றுபயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
PM Narendra Modi has spoken to Arun Jaitley’s wife and son, and expressed his condolences. Both of them insisted that PM does not cancel his current foreign tour. pic.twitter.com/obQiBh3Cso
— ANI (@ANI) August 24, 2019