சென்னை மடிப்பாக்கம், காந்தி நகரைச் சேர்ந்த சங்கர்லால் என்பவர் சிதம்பரம் பகுதியில் ரவுடியாக வலம் வந்தவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே சில மர்ம நபர்களால் தலை சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆறு பேர் கொண்ட ஒரு கூலிப்படை கும்பல் சரணடைந்தது. கொலை செய்யப்பட்ட சங்கர்லால் மீது பல்வேறு வழக்குகள் இருந்தது. பழிக்கு பழியாக இந்த சம்பவம் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. ஆசை நாயகி என்ற ஒரு பெண்ணிற்காக ஏற்பட்ட மோதலில் தான் சங்கர்லால் கொலை செய்யப்பட்டார் என்ற சம்பவம் செய்தி தற்போது வெளியாகி இருக்கின்றது.
சிதம்பரம் பகுதியில் கூலிப்படையாக, செயல்பட்டு வந்த இவர் ஒரே தட்டில் சாப்பிடும் அளவிற்கு ராஜா என்பவருடன் பயங்கரமான நட்பில் இருந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆசைநாயகி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ராஜாவும் அதே பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் அந்த பெண்ணுடன் தனிமையில் சந்தித்து உறவு வைத்துக் கொண்டு இருந்துள்ளனர்.
ஆசை நாயகியுடன் ராஜா பழகியது தெரிந்ததும் விட்டுக் கொடுக்கும்படி சங்கர்லால் கேட்டுள்ளார். ஆனால், ராஜா தொடர்ந்து தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்த விஷயம் சங்கர்லால்க்கு தெரியவரவே இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ராஜாவின் கையை வெட்டியுள்ளார். அதற்கு பின் ராஜா திருப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளார்.
அங்கு அவர் தொழில் செய்து வந்துள்ளார். ஆனால் ராஜாவிற்கு சங்கர்லால் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமும், ஆசை நாயகியை மீண்டும் தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் தீராத வெறியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அவர் கூலி படை ஒன்றை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் ஆசை நாயகி சங்கர்லாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்த விஷயம் தெரிந்ததும் ஏற்கனவே கோபத்தில் இருந்த ராஜா இன்னும் உச்சத்திற்கு சென்றார். மறுநாளே ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே வைத்து கூலிப்படையினருடன் சேர்ந்து வெறித்தனமாக வெட்டி தலையை துண்டித்து தனது பகையைத் தீர்த்துக் கொண்டுள்ளார். காவல்துறையினர் விசாரணையில் இந்த கொடூர சம்பவம் அம்பலமாகியது.