திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பெண்கள் கல்லூரியின் வாயிலில் நின்று கொண்டு இருந்த வாலிபன்கள்., கல்லூரிக்கு வரும் மாணவிகளுடன் பேச்சு கொடுப்பது போன்று பேச்சு கொடுத்து., அதனை மாணவிகளுக்கு தெரியாமல் பதிவு செய்து., “டிக் டாக் பண்ணுங்க.. அழகாக இருக்கிறீர்கள்” என்ற தலைப்புடன் யூடுப் செயலியில் பதிவேற்றியுள்ளான்கள்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் பதிவேற்றப்பட்டவுடன் வைரலாகவே., இதனை கண்ட மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர் – உறவினர்கள் அதிர்ச்சியடைந்து., கல்லூரி நிர்வாகத்தரின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்றனர். இந்த விவகாரத்தை அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர்., திருநெல்வேலி காவல் ஆணையர் அலுவககத்தில் சென்று விஷயத்தை கூறி புகார் அளித்தனர்.
இதனையடுத்து இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு., இந்த செயலில் ஈடுபட்ட ரோமியோக்களை கைது செய்தனர். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., யூடுப் சேனல் நடத்தி வரும் நிலையில்., பிற நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டு வந்த தருணத்தில்., வைரலாவதற்கு இதனை முயற்சித்தது தெரியவந்தது.
மேலும்., விசாரணைக்கு பின்னர் இது போன்று நாங்கள் செய்தது தவறு என்றும்., இனி இது போன்று செய்ய மாட்டோம் என்றும் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட காணொளிகளை இணையத்தில் இருந்து நீக்கி விடுவதாகவும் கூறியுள்ளனர். இவர்களை காவல் துறையினரும் பாத்ரூமில் விளையாடவிடாமல் பக்குவமாக எச்சரித்து அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணையின் போது காவல் நிலையத்தில் இருந்த பெண் குழந்தைகளின் தங்கை மற்றும் சகோதரர்கள் “உனது வீட்டில் இருக்கும் பெண் குழந்தையிடம் இவ்வாறு யாரேனும் கிண்டல் செய்தால் விடுவாயாலே, இதற்கு நீயே இணையத்தில் என் சகோதரியை அருமையாக கிண்டல் செய்திருக்க லே” என்று கூறி லைக்குகளை போடுவயலே” என்று கோபத்தில் கொந்தளித்தார்.
இதனை கேட்ட பிராங்க் ரோமியோக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனை போன்ற பிராங்க் நிகழ்ச்சிகளால் பலர் வாழ்க்கையை துளைத்தும்., பெண் பிள்ளைகள் நிம்மதியாக கூட வெளியே சென்று வராத நிலையும் இருந்து வருவதால் இதனை தடை செய்ய வேண்டும்.