மக்கள் வனிதாவை வெளியே அனுப்பிய பின்னர் விருந்தினர் எனும் போர்வையில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டு வனிதாவை மீண்டும் போட்டியாளராக அறிவிக்கப்பட்டார். இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சமூகவலைதளங்களில் நாங்கள் வெளியே அனுப்பிய ஒருவரை எப்படி மீண்டும் போட்டியாளர் அறிவிக்கலாம் என கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அது குறித்து எந்த கவலையும் படவில்லை. இந்த நிலையில் சென்ற வாரம் பள்ளிக்கூடம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில், கஸ்தூரியும், சேரனும் ஆசிரியர்களாகவும் மற்ற அனைவரும் மாணவர்களாகவும் நடித்தனர். இதில் கஸ்தூரிக்கும், வனிதாவிற்க்கும் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் கஸ்தூரியை வனிதா மன்னிப்பு கேட்க வைத்தார்.
டாஸ்க் முடிந்து பேசிய சேரன், ஷெரினிடம், “ஸ்ட்ரைக் அறிவிப்பது எல்லாம் சரியானது அல்ல. எனவே இந்த வார வொர்ஸ்ட் பர்பாமெர் கஸ்தூரியும், அனிதாவும் தான்.” என அவர் தெரிவித்தார். இதனால் கஸ்தூரியும், வனிதாவும் ஜெயிலுக்கு போவார்கள் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் இந்த வாரம் சிறந்த போட்டியாளர் யார் என்ற கேள்வியோடு பிக்பாஸ் முடித்துக் கொண்டது. வனிதாவின் பெயர் அங்கு அடிபடாமல் பிக்பாஸ் பார்த்துக் கொண்டது கவனிக்கத்தக்கது. மிக மோசமாக விளையாடியது யார் என்ற கேள்வியே அங்கு முன்வைக்க பிக்பாஸ் மறுத்துவிட்டது. வனிதாவுடன் சேர்ந்து கஸ்தூரியும் காப்பாற்றப்பட்டு இருக்கின்றார்.
கஸ்தூரி சென்றுவிட்டால் வனிதாவுடன் சண்டை போட ஆள் இருக்காது. ஏனென்றால் மற்ற அனைவரும் வனிதாவிடம் அடங்கி போய் விடுவார்கள் என பிக்பாஸ் கணக்கிடுகிறது. இதன் காரணமாகவே இந்த வாரம் சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனில் பிக்பாஸ் இருக்கு அனைத்து ஹவுஸ் மற்றும் பயப்படுகின்றனர்.
ஆனால், பிக்பாஸ் மனிதா விற்காக மட்டுமே பயந்து வருகிறது என்பது நாளுக்கு நாள் நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் கமல் என்னதான் வனிதாவை கண்டித்து வந்தாலும், பிக்பாஸ் இருக்கும் தைரியத்தில் வனிதா எக்குதப்பாக ரணகளம் செய்து வருகின்றார்.