இளவரசர் செய்யும் காரியத்தால் திமுகவில் டிஷ்யூம்.,டிஷ்யூம்.!

இளைஞரணி பதவியில் அமர்ந்த உதயநிதியை ப்ரமோட் செய்வதில் கனிமொழிக்கு தற்பொழுது சில வருத்தங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் உதயநிதிக்கும் தெரியும். இந்நிலையில், அதிமுக மற்றும் பாமக போல இளம்பெண்கள் பாசறை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதற்கு கனிமொழியை முக்கிய நிர்வாகியாக மாற்றலாம் என திமுக வட்டாரத்தில் திட்டம் தீட்டப்பட்டு வருகின்றது.

இந்த ஐடியா சபரீசன் மூலம் தன் ஏற்பட்டுள்ளது. உதயநிதி & கோ நடத்தும் ஆலோசனைகள் எல்லாம் ஒவ்வொரு நாளும் ஸ்டாலினுக்கு அன்றாடம் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதில் சில முக்கிய விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறி சில மாவட்டசெயலர்களுக்கும், கட்சி சீனியர்களுக்கும் கசிந்துள்ளது.

இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத சீனியர்கள், ‘கலைஞர் மிக பெரிய அரசியல் சாணக்கியன். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் காலத்தில் அவர் கட்சியில் ஒன்றும் பெரிய மாற்றங்களை செய்ததே இல்லை. ஆட்சியில் இருக்கும் போது மட்டும் தான் அதிரடியான மாற்றங்களை கொண்டு வருவார்.

இதுக்கு முக்கிய காரணம் ஆட்சியில் இருக்கும் போது கட்சியில் மாற்றம் கொடுக்கும் பட்சத்தில் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க தயங்குவார்கள். அப்படி எதிர்ப்பு வந்தாலும் கூட ஆட்சியை காட்டி உக்கார வச்சிடலாம். இதை ஸ்டாலினும் பின்பற்றினால் நன்றாகயிருக்கும்.

முதலில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். அதன் பின்னர் தான் கட்சி பொறுப்பில் மாற்றம் வரவேண்டும். இல்லையெனில் பாதி ஆற்றில் நிற்கவேண்டியது தான்.” என புலம்புவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.