முள் சீதாப்பழம் மூலம் உடல் எடையை குறைப்பது உட்பட, ஏராளமான நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.
முள் சீதாப்பழம்
பார்ப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாகவும், அருவருப்பாகவும் இருக்கும் இந்தப் பழம் சாதாரணமாக கடைத்தெருக்களிலேயே கிடைக்கும்.
முள் சீதாப்பழம் ஆயுர்வேத மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
நல்ல இனிப்பு கலந்த புளிப்பு சுவை கொண்ட இந்தப் பழம், உடலில் உள்ள ஏராளமான நோய்களை தீர்க்க உதவுகிறது.
உடல் எடை குறைப்பு
நமது உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதற்கு முள் சீதாப்பழம் பெரிதும் உதவுகிறது.
வயிற்றுப்பகுதி, தொடைப்பகுதி உள்ளிட்ட உடலில் அதிகமாக கொழுப்புத் திசுக்கள் தேங்கியிருக்கும் கொழுப்பை இந்தப் பழம் கரைக்க உதவுகிறது.
புற்றுநோய்
புற்றுநோயை குணப்படுத்துவதிலும் முள் சீதாப்பழம் மிகச்சிறந்த வகையில் பயன்படுகிறது. இது உடலில் புற்றுநோய் செல்கள் வருவதை தடுக்கும். ஒருவேளை புற்றுநோய் செல்கள் ஏற்கனவே இருந்தால், அவற்றை வளர விடாமல் தடுக்கும்.
இதில் உள்ள அதிக அளவு ஆன்டி அசிடோன், உடலுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. எனவே, முள் சீதா இலைகளை தேநீரில் போட்டு குடித்து வந்தால் புற்றுநோய் தாக்கம் குறையும்.
ரத்த சர்க்கரை
இந்த பழம் இனிப்பாக இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் இதனை தாராளமாக சாப்பிடலாம்.
இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுவதுடன், ரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மருந்தாக முள் சீதாப்பழம் உள்ளது. இதன் இலைகள் அஜீரண கோளாறுகள், தசைப்பிடிப்பு, வீக்கம் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.