வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் முன்னிலையில் மிகப்பெரிய ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டது.
சர்வதேச அளவில் எதிர்ப்புகளை மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகிறது.
இதனால் உலக நாடுகள் கலக்கமடைந்த நிலையில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அணு ஆயுத பரிசோதனைகள் கைவிடப்படும் என்று வடகொரியா அறிவித்தது.
ஆனால், மீண்டும் அணு ஆயுத பரிசோதனையில் வடகொரியா ஈடுபட்டு வருவதை தென்கொரிய ராணுவம் உறுதிபடுத்தியது. கடந்த யூலை 25, யூலை 31, ஆகஸ்டு 2, ஆகஸ்டு 6, ஆகஸ்டு 10 மற்றும் ஆகஸ்டு 16 ஆகிய நாட்களில் வடகொரியா ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டது.
இந்நிலையில், ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை செலுத்தும் மிகப்பெரிய ஏவுகணையான ‘Super Large Multiple Rocket Launcher’வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் முன்னிலையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
KCNA/Reuters
இதுதொடர்பாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,
இந்த புதிய மேம்பட்ட சாதனம், ஒரு மிகப்பெரிய ஆயுதமாக திகழும். எதிரி நாட்டு படைகளால் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற ராணுவ அச்சுறுத்தல் மற்றும் ஆதிக்க அழுத்தங்களை, தயக்கமின்றி தடுக்கின்ற வகையில் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர வேண்டிய தேவை நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது என கிம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.