பொல்லால் தாக்கி ஒருவர் கொலை….!!

களனி பகுதியில் பொல்லால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

களனி பஸ்தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று  சனிக்கிழமை மாலை 4.35 மணியளவில் நபரொருவர் பொல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது களனி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய தொல்வா மரகலகே சமிந்த குமார என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்த நபர் சாரதியின் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் பிரிதொரு நபருககும் இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாட்டின் காரணமாவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதுடன், இவரை அடையாளம் காணுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லேரியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களனிபொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.