காஞ்சிபுரம் அருகே மர்ம பொருள் வெடித்ததாகவும், இதன் காரணமாக ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள, திருப்போரூர் அருகே இருக்கும் கோவில்தான் மானாமதி கங்கை அம்மன் கோவில். இந்த கோவில் அருகே ஒரு பொட்டலம் இருந்துள்ளது. அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருக்கும் அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது அதில் இருந்த மர்மப் பொருள் வெடித்து சிதறியுள்ளது.
இதன் காரணமாக பிரித்துப் பார்த்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், உடன் இருந்த 5 பேர்கள் மிகவும் பலத்த காயத்துடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்த நிலையில் இந்த மர்ம பொருள் வெடிப்பு சம்பவம் குறித்து பொதுமக்கள் பீதியில் இருக்கின்றனர். காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.