கள்ளகாதலுக்காக குழந்தைகளுக்கு விஷம் தடவிய பிஸ்கட்டை கொடுத்து கொலை..!

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரை அடுத்துள்ள பகுதியை சார்ந்தவர் ராகவனத்தம். இவரது மனைவியின் பெயர் ரஞ்சிதா. இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். ராகவனத்தம் வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில்., இவரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் மேலூரில் உள்ள பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில்., கடந்த 2016 ஆம் வருடத்தின் போது வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்த குழந்தைகளான பார்கவி மற்றும் யுவராஜா ஆகிய இருவரும் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்த நேரத்தில்., வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்ததாக உறவினர்களிடம் கூறி நம்பவைத்து ஏமாற்றியுள்ளார். இந்த தருணத்தில்., அதே பகுதியில் கல்யாணகுமார் என்பவன் வசித்து வந்துள்ளான். கல்யாண குமாருக்கும் – ரஞ்சிதாவிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். வெளிநாட்டில் பணியாற்றி வந்த ராகவனத்ததிற்கு இந்த தகவல் தெரியவரவே., குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் அடைந்துள்ளார். இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் ராகவனத்தம் புகார் அளித்த நிலையில்., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொலை செய்தது தெரியவந்தது.

இந்த தகவல் 3 வருடங்களுக்கு பின்னர் வெளிவந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடிகளை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த தகவல் முதலிலேயே வெளியான நிலையில் தற்போது முழு விசாரணை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் கள்ளகாதல் மலர்ந்ததை அடுத்து., கணவனும் வெளிநாட்டில் பணியாற்றி வந்த காரணத்தால்., வீட்டிற்கு கள்ளக்காதலனை வர சொல்லி உல்லாசமாக இருந்துள்ளாள். இவரது கள்ளகாதலனும் இரவில் வீட்டிற்கு வந்து அதிகாலையிலேயே கிளம்பி சென்றுவிடுவதை வழக்கமாக வைத்துள்ளான். இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு குழந்தைகள் இடையூறாக இருந்துள்ளது.

இதனையடுத்து ரஞ்சிதா தான் பெற்றெடுத்த குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டு., கடந்த அக்டொபர் 10 ஆம் தேதியன்று., 2016 ஆம் வருடத்தில் மூன்று குழந்தைக்கும் விஷம் தடவிய பிஸ்கட்டை வழங்கியுள்ளாள். இதனை சாப்பிட்ட குழந்தைகளில் பார்கவி மற்றும் யுவராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மேலும்., மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கிரிபாலன் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். குழந்தைகளின் இறப்பிற்கு எலி மருந்து தடவிய பிஸ்கட்டை யாரோ வழங்கியுள்ளனர் என்றும் அங்குள்ள காவல் நிலையத்தில் புகைரளித்து பலே நாடகம் அரங்கேற்றியுள்ளாள்.
குழந்தைகளின் இறப்பு செய்தி வந்ததும் சொந்த ஊருக்கு திரும்பிய ராகவனந்தத்திற்கு., கிரிபாலன் நடந்ததை கூறியுள்ளார்.

இந்த சமயத்தில் குழந்தை கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தாயும் – வீட்டிற்கு இரவு நேரத்தில் வந்து செல்லும் நபரும் விஷம் தடவிய பிஸ்கட்டை கொடுத்ததை கூறி., பிஸ்கட் நல்லா இல்லை என்பதால் நான் அதனை துப்பிவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ராகவனந்தம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கவே., அந்த சமயத்தில் காவல் துறையினர் இந்த விசாரணைக்கு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து இந்த விஷயம் குறித்து மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில்., இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை உடனடியாக துவங்க கூறி உத்தரவிட்டனர்.

இதற்குப்பின் மேற்கொள்ளப்பட்ட அதிரடி விசாரணையில்., கடந்த 2017 ஆம் வருடம் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து., ரஞ்சிதா மற்றும் கல்யாண்குமாரை குற்றவாளிகளாக அறிவித்தனர். அறிவித்தது அறிவித்தபடியே இருந்த நிலையில்., இப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள மணிவண்ணன்., நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க கூறி காவல் துறையினருக்கு உத்தரவிட்டதன் பேரில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்து., தலைமறைவாக இருந்த இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இருவரிடமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.