பிக்பாஸ் நாட்கள் அதிரடியாக குறைக்கப்படுகிறதா?

பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பஞ்சம் இருக்காது. தமிழ், தெலுங்கு மற்றும் மராத்தி மொழிகளில் பிக்பாஸ் நடந்துகொண்டிருக்கும் நிலையில் விரைவில் ஹிந்தியிலும் 13வது சீசன் துவங்குகிறது.

சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் புதிய டீஸர் ஒன்றும் தற்போது வெளிவந்துள்ளது. அதில் சல்மான் கான் சொல்லும் ஒரு விஷயம் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. நான்கே வாரத்தில் பைனல் என்பது போல அவர் கூறியுள்ளார்.

இதனால் பிக்பாஸ் நடக்கும் நாட்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறதா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.+