போதை பழக்கம் பல்வேறு விதங்களில் மக்களிடம் உள்ளது. அதை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தும் கோலா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பாக்கியராஜ் தானும் கஞ்சா அடித்ததாக மேடையிலேயே கூறியுள்ளார்.
“நானே கஞ்சா நிறைய அடித்திருக்கிறேன். சிகரெட்டுல கலந்து கொடுத்தார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் ‘ஏதோ சாதிக்க நினைத்தோம்.. இப்படி போதையில் இருக்கிறோமே’ என தோன்றியது. புத்தருக்கு போதி மரம் மாதிரி எனக்கு போதை மரம் தான் புத்தி கொடுத்தது” என பாக்யராஜ் பேசியுள்ளார்.