போதையில் சண்டையிட்டு வடபழனி சாலையை பிளாக் செய்த நடன கலைஞர் – மனைவி.!

சென்னையில் உள்ள வடபழனி பீமாஸ் ப்ளஸ் நட்சத்திர விடுதியில்., பார் நடத்த அனுமதி உள்ள காரணத்தால் பார் மட்டும் நடத்தி வந்த நிலையில்., அனுமதியின்றி இதனோடு இணைத்தபடி பப்பும் செயல்பட்டு வருகிறதாக அங்குள்ளவர்களால் கூறப்படுகிறது. மேலும்., இங்கு மது அருந்த வரும் பெண்களுக்கு மது இலவசம் என்ற காரணத்தால்., பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களின் காதலிகள் – தோழிகளுடன் வந்து செல்வது வழக்கமாகிவிட்டது.

இந்த நட்சத்திர விடுதிக்கு வரும் இருபாலரும் மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடியபடியே வெளிவருவதும்., சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிவிட்டால் வண்ண விளக்குகளுடன் ஜொலிஜொலிக்கும் அரைகுறை இருட்டு வெளிச்சத்திற்குள் போதையில் பெண்களும் – ஆண்களும் நடனமாடி பொழுதை கழித்து வருகின்றனர்.

இதுமட்டுமல்லாது இந்த விடுதிக்குள் ஜோடியாக வந்தால் மட்டும் அனுமதி என்ற கேடுகெட்ட விதிமுறையும் உள்ளது. சுயலாபத்திற்காக விபச்சாரம் கூட செய்ய தயங்கமாட்டார்கள் என்பதை போலவே அனைத்து துயரமும் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில்., இந்த விடுதிக்கு திருநகர் பகுதியில் வசித்து வரும் திரைத்துறை நடன கலைஞர் ஹேமந்த் மற்றும் அவரின் மனைவி., அவரது நண்பர்கள் நாலு நல்லவர்களுடன் பப்பிற்குள் சென்றுள்ளனர்.

இந்த பப்பில் அனைவரும் மது அருந்திய நிலையில்., ஹேமந்த்தின் மனைவி அதிகளவு மது அருந்தியதால் போதை தலைகேறியுள்ளது. மேலும்., ஓசி சோறு போல ஓசி மது பானத்தையும் அதிகளவு அடித்து., அங்குள்ள ஆண்களை கட்டியணைத்து ஆபாசமாக நடனமாடியுள்ளார். இதனை கண்டு ஆத்திரமடைந்த கணவர்., மனைவியை திட்டவே., இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரும் பப்பிற்குள் கலவரத்தில் ஈடுபட்டதால்., அங்கிருந்து வெளியேறிய நிலையில்., விடுதியில் இருந்து வெளிவந்து சாலையில் கட்டிஉருண்டு சண்டையிட்டு கொண்டனர். இதன் காரணமாக அந்த இடத்தில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்., கணவனின் பிடியில் இருந்து தப்பி அங்குள்ள கடையில் தஞ்சமடைந்துள்ளார்.

இதற்குப்பின் கடைக்கு சென்ற ஹேமந்த் மற்றும் அவனது நண்பர்கள் அப்பாவி கடைக்காரரை போட்டு புலந்து எடுத்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்துக்கு கடைக்காரர்கள்., கடைக்காரருக்கு ஆதரவாக வந்து ஹேமந்த் மற்றும் அவனது நண்பர்களை புரட்டி எடுத்தனர். பின்னர் இந்த தகவலானது வடபழனி காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., போதையில் ரகளையில் ஈடுபட்ட அனைவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். காவல் துறையினர் வந்ததும் நைசாக ஹேமந்த்தின் மனைவி சம்பவ இடத்தில் இருந்து தெறித்தோடியுள்ளார். ஓசி குடிக்கு ஆசைப்பட்டு., பொதுமக்களிடம் மிதி வாங்கிய கணவன் சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.